பிடிக்காத வார்த்தை "தயக்கம்'
தான் பெற்ற பிள்ளைகளை விட, சீடர்கள் மீது குருநானக் மிகுந்த அன்பு செலுத்தினார். இது அவர்களுக்கு பிடிக்கவில்லை.
ஒரு மகன் சொன்னான், ""பெற்ற பிள்ளையை விட சீடர்களை உயர்வாக மதிக்கிறார் என்றால், அதில் ஏதோ சூட்சுமம் இருக்க வேண்டுமே! அதைக் கண்டுபிடியுங்கள்,'' என்று.
எவ்வளவோ ஆய்வு செய்து பார்த்தார்கள். கண்டுபிடிக்க முடியவில்லை. தந்தையிடமே கேட்டு விடுவதென முடிவு செய்தார்கள்.
""அப்பா! நீங்கள் செய்வது முறையா? பெற்ற பிள்ளைகளை விடவா சீடர்கள் உங்களுக்குப் பெரிதாகி விட்டார்கள்!
அப்படியென்ன
உங்களுக்கு நாங்கள் வேண்டாதவர்களாகி விட்டோம்!'' குருநானக் புன்னகைத்தார்.
பதிலேதும் சொல்லாமல், ஒரு கிண்ணத்தைத் தூக்கி அருகிலிருந்த சாக்கடையில்
எறிந்தார். கிண்ணம் மூழ்கி விட்டது. ""அதை எடுத்து வாருங்கள்,'' என்று
கட்டளையிட்டார்.
ஒரு வேலைக்காரனை விட்டு அதை எடுத்து வந்து கொடுத்தார்கள் பிள்ளைகள்.
அந்தக் கிண்ணத்தை திரும்பவும் சாக்கடையில் எறிந்தார்.
"இவருக்கு என்னாயிற்று' என்று பிள்ளைகள் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு சீடரை அழைத்து அதை எடுத்து வரச்சொன்னார்.
அவர் சற்றும் யோசிக்கவில்லை. சாக்கடைக்குள் குதித்தார். கிண்ணத்தை தேடி எடுத்து கழுவி, குருவின் கையில் ஒப்படைத்தார்.
இப்போது குருநானக் ஏறிட்டு பார்த்தார். பிள்ளைகள் அங்கே இல்லை....
Cheers!
No comments:
Post a Comment
I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.