கங்கைக் கரையில் குடில் அமைத்திருந்த முனிவருக்கு ஒரு சீடன் இருந்தான்.
அவனுக்கு "ஓம் முருகா' என்னும் மந்திரத்தை அவர் உபதேசித்திருந்தார். எதை
மறந்தாலும் மந்திரம் ஜெபிக்க அவன் மறந்ததில்லை.
ஒருமுறை முனிவர்
இமயமலைக்கு யாத்திரை புறப்பட்டார். வழக்கமான பூஜைகளை சீடன் நடத்தி வந்தான்.
இந்த சமயத்தில், அந்நாட்டு மன்னன் கவலையுடன் முனிவரைத் தேடி வந்தான்.
மன்னனை வணங்கிய சீடன், ""மன்னா! உங்கள் கவலை எதுவானாலும் என்னிடம்
சொல்லுங்கள். தீர்வு சொல்கிறேன். நோய் தீர மருந்து தான் தேவை. ஆள் முக்கியமில்லை
,'' என்றான்.
சிறுவனின் பேச்சில் நம்பிக்கை பெற்ற மன்னன், ""விலங்கைக்
கொல்ல நான் செலுத்திய விஷ அம்பு, அந்தணர் ஒருவரைக் கொன்றுவிட்டது. அந்தப்
பாவம் தீர வழிகாட்டவேண்டும்,'' என்றார்.
"கவலைவேண்டாம். கங்கையில்
நீராடி, வடக்கு நோக்கி இருகரம் குவித்து மூன்று முறை "ஓம் முருகா' என்று
உள்ளம் உருகி ஜெபியுங்கள்,'' என்றான். மன்னனும் அதைச் செய்து பாவநிவர்த்தி
பெற்றான்.
யாத்திரை முடித்து முனிவர் திரும்பினார். மன்னனுக்கு தான்
செய்த பரிகார விபரத்தை சீடன் அவரிடம் சொன்னான். மகிழ்ச்சி அடைவதற்கு
பதிலாக, முனிவர் கோபம் கொண்டார். ""ஒருமுறை ஓம் முருகா என்றாலே ஆயிரம்
தோஷங்கள் நிவர்த்தியாகுமே. மூன்று முறை ஏன் சொல்ல சொன்னாய்? உனக்கு
அம்மந்திரத்தின் மகிமை தெரியவில்லை. நீ அடுத்த ஜென்மத்தில் கங்கைக்கரையில்
வேடனாகப் பிறப்பாய்,'' என்றார்.
அந்தச் சீடனே, கங்கைக்கரையில் குகனாகப்
பிறந்து ராமனுக்கு உதவி செய்யும் பாக்கியம் பெற்றான். குகன் என்பது
முருகனின் பெயர்களில் ஒன்றாகும். பக்தர்களில் மனக்குகையில் வசிப்பவன்
என்பது பொருள்.
Cheers!
No comments:
Post a Comment
I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.