பிறந்த நாடே சிறந்த கோயில்
ராவணனை அழித்த பிறகு ராமபிரான் அயோத்திக்கு கிளம்பினார்.
லட்சுமணன்
அவரிடம்,""அண்ணா! தங்கள் சார்பில் அயோத்தியை பரதன் சிறப்பாக ஆண்டு
கொண்டிருக்கிறான். நீங்கள் அங்கு சென்று. அவனது ஆட்சிக்கு வீணாக ஏன்
தொந்தரவு தர வேண்டும்! எனவே, நீங்களே இலங்கையின் அரசனாகி விடுங்கள்.
அயோத்தியை விட இலங்கை செல்வத்தில் உயர்ந்தது. சொர்க்கத்தைப் போன்ற
அழகுள்ளது. அது மட்டுமல்ல! உங்கள் ஆட்சியில் இங்குள்ள மக்கள் இனியாவது
மகிழ்ச்சியுடன் வாழட்டுமே!'' என்றான்.
ராமபிரான் அவனை அருகில்
அழைத்து,""தம்பி! நீ புரியாமல் பேசுகிறாய். உன் தாய் ஏழையாக இருக்கலாம்,
பார்வை இல்லாதவளாக இருக்கலாம். மற்ற பெண்களைப் போல கல்வி
அறிவில்லாதவளாகவும், அழகில்லாதவளாகவும் கூட இருக்கலாம். அதற்காக, அவளை உன்
தாய் இல்லை என்று மறுத்து விட முடியுமா!
கல்வியும், அழகும், பணமும்
கொண்டிருக்கும் பெண்களெல்லாம் உனக்கு தாயாகி விட முடியுமா? தாயும்,
தாய்நாடும் ஏழ்மையில் இருந்தாலும், அதற்காக ஒருவன் அதை துறந்து
விடக்கூடாது. இந்த உடல் அயோத்தியில் பிறந்தது. அந்த மண்ணில் விளைந்த உணவுப்
பொருட்கள் தான் இந்த உடம்பை வளர்த்தது. எனவே, இந்த உடல் அயோத்தி மண்ணில்
தான் மடிய வேண்டும்,'' என்றார்.
சொந்த மண்ணை மதிக்க வேண்டும் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் உண்டா என்ன!
Cheers!
No comments:
Post a Comment
I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.