பாகவதம் பிறந்த கதை
வேதங்களை தொகுத்து நான்காக வகைப்படுத்தியவர் வேத வியாசர்.
பைல முனிவர்
மூலம் ரிக், வைசம்பாயனர் மூலம் யஜுர், ஜைமினி முனிவர் மூலம் சாமம், சுமந்து
மூலம் அதர்வணம் என, சிஷ்ய பரம்பரை முறையில் வேதங்களைக் கற்பிக்க வழி
செய்தார்.
வேதங்களின் உட்கருத்துகளை, பாமரர்களும் உணர்ந்துகொள்ளும் வகையில்
18 புராணங்களை இயற்றினார். எனினும், இந்த உலகம் வேதங்கள் உணர்த்தும்
தர்மநியாயத்தைப் பின்பற்றுமா என்ற சந்தேகம் இருந்தது. இதன் காரணமாக அவரது
மனதில் அமைதி இல்லை.
இதை நாரதரிடம் கூறினார். அவர், வியாசரிடம், ""முனிவரே!
புராணங்களையும், சாஸ்திரங்களையும் மட்டுமல்லாது பகவானுடைய பூரண
குணங்களையும் மக்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு
திருப்தி ஏற்படும். எனவே, பகவானின் கல்யாண குணங்களைக் குறிக்கும் ஒரு நூலை
இயற்றுங்கள்,'' என்றார்.
அதன்படி தன் புத்திரர் சுகப்பிரம்மரிடம் ஸ்ரீமத்
பாகவதம் என்ற நூலை இயற்றுமாறு அருளினார். திருமாலின் திவ்யலீலைகள் இதில்
இடம் பெற்றுள்ளன.
Cheers!
No comments:
Post a Comment
I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.