வேதம், புராணம், மகாபாரதம் இப்படி எத்தனையோ எழுதியும் வியாசரின் கவலை
தீராமல், சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்திருந்தார். நாரதர் அங்கு வந்தார்.
"வியாசரே! நீண்ட நாளாக ஒரு சந்தேகம். சிதை, சிந்தை இரண்டையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்,'' என்றார்.
"சிதை என்பது உயிரற்ற உடலுக்குரிய படுக்கை. சிந்தை என்பது மனதில் ஏற்படும் வருத்தம்,'' என்றார் வியாசர்.
நாரதர் அவரிடம்,""சிந்தையை விட சிதை மேலானது. சிதையில் உயிரில்லாத பிணம் மட்டுமே எரியும். ஆனால், கவலையால் உயிருள்ள நம் சரீரமே எரிந்து விடும். அதனால், கவலையை ஒரு மூலையில் தூக்கிப் போடுங்கள்,'' என்றார். இந்த அருமையான விளக்கம் வியாசருக்கு மனதில் தெளிவு ஏற்பட்டது.
"வியாசரே! உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட வேண்டுமானால், என்றுமே மகிழ்ச்சியாக இருந்த கிருஷ்ணரின் பெருமையைக் கூறும் பாகவதத்தை எழுதுங்கள். கவலை தீரும்,'' என்று வழிகாட்டினார்.
வியாசரும் அதன்பின் அமிர்தம் போன்ற பாகவத்தை எழுதினார்.
மகிழ்ச்சியில் திளைத்தார். அவதாரங்களிலேயே கிருஷ்ணாவதாரம் மட்டுமே
எப்போதும் மகிழ்ச்சியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
Cheers!
No comments:
Post a Comment
I would love to hear from you! I read each and every comment, and will get back ASAP.